புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கோட்டைக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழா கடந்த மூன்றாம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போரை கண் கவர செய்தது.

மேலும் இன்று கூட்டு திருப்பலி மற்றும் புனித சூசையப்பர் ஆலய தேர் பவனி நடைபெற்றது.கூட்டு திருப்பலியில் நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக ஒற்றுமை வேண்டியும் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
புனித சூசையப்பர் தேரானது மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புனித சூசையப்பர் சொரூபம் அமர்த்தப்பட்ட மூன்று தேர்களை கோட்டைக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திரளான பொதுமக்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.இந்த தேரானது இரவு 10 மனிக்கு தொடங்கி கிராமத்தின் முக்கிய வீதிகளில் வழியாக விடிய விடிய பவனி வந்தது.