• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாபெரும் இலவச மருத்துவ முகாம்..,

ByS. SRIDHAR

May 10, 2025

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி எஸ்.குளவாய்ப்பட்டி குமார் திருமண மஹாலில் கம்பன் கழக தலைவர் தொழிலதிபர் எஸ்.ராமச்சந்திரன் பிஎஸ்சி, தலைமையில் எஸ்.ஆர்.வேதா பவர் மற்றும் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து வழங்கும் மாபெரும் இலவச மருத்துவ முகாமை S.R வேதா பவர் இயக்குனரும் இளம் தொழிலதிபர் எஸ்.ஆர். பால சண்முகம் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

முன்னதாக மகளிர்காண மருத்துவம் பொது மருத்துவம் காது மூக்கு தொண்டை எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுற்றுவட்டார ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனர். மேலும் அவர்களுக்கு இலவச ஸ்கேன் எடுக்கப்பட்டு நோய்கள் கண்டறிந்து சிறப்பு பரிசோதனை செய்து கொண்ட பொது மக்களுக்கு மருந்துகள் வழங்கியும் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் இலவசமாக சிகிச்சைகாக நோயாளிகளை அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திமுக திருவரங்குளம் வடக்கு தெற்கு ஒன்றிய செயலாளர்கள் தங்கமணி அரு.வடிவேல் தொழிலதிபர்கள் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.