ஆலங்குடி அருகே நெம்மக்கோட்டை ஸ்ரீ சித்தி விநாயகர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு 73 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இதில் 750 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் முறையாக மாடுபிடி வீரர்களுக்கு மேற்கூரை பச்சை துணியால் அமைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே வீரர்களுக்கும் வெயில் அடிக்காமல் இருக்க மேற்கூரை அமைக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு 73 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதில் 750 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை பிறப்பட்டத துறை அமைச்சர் மெய்யநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஸ்ரீதர் ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகளும் அதேபோன்று பல்வேறு பகுதிகளில் இருந்து 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கி வருகின்றனர் சில காளைகள் களத்தில் இறங்கி வீரர்களை மிரள வைத்து சென்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பணம், வெள்ளி காசு,ட்ரெஸ்ஸிங் டேபிள், அண்டா, கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆரவாரத்துடன் ஜல்லிக்கட்டு போட்டியினை கண்டு ரசித்து வருகின்றனர்.