• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

1½ கிராம் தங்கத்தில் ஜெயலலிதா உருவ படம்

Byமதி

Dec 5, 2021

ஆம்பூர் ‌ஷராப் பஜாரை சேர்ந்தவர் 55 வயதான தேவன். தங்க நகை சிற்பியான இவர் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வருகிறார். இவர் ஏற்கனவே அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, அப்துல் கலாம், கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் அனைத்து மதப் பண்டிகைகளின் சின்னங்களை தங்கத்தால் செதுக்கி உள்ளார்.

இந்தநிலையில், முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 5-வது நினைவு நாளையொட்டி கடந்த 3 நாட்களாக வேலை செய்து 1½ கிராம் தங்கத்தில் ஜெயலலிதா முழு உருவ படத்தை செதுக்கி உள்ளார். இதனுடைய மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.