சிவகங்கை நகரில் அமைந்துள்ள ஸ்ரீசந்தன மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம், கரகம் எடுத்து நகர்வலம் வந்தனர்.
சிவகங்கை மாவட்டம்சிவகங்கை நகரில் உள்ள முதலியார் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த இரண்டாம் தேதி காப்பு கட்டுடன் திருவிழா தொடங்கியது.தினசரி காலை மாலை அம்மனுக்கு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து எட்டாம் நாள் திருவிழாவான இன்று ஒன்பதாம் தேதி சிவகங்கை நகரில் மையப்பகுதியில் அமைந்திருக்கும் தெப்பக்குளத்தில் இருந்து பக்தர்கள் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பால் குடம், தீச்சட்டி மற்றும் அலகு குத்தி நகரின் முக்கிய விதிகள் வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர்.


சந்தன மாரியம்மனுக்கு அனைத்து வகை அபிஷேகங்கள் தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.
