• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கார் மோதி விபத்து , பெண் பலி..,

ByKalamegam Viswanathan

May 9, 2025

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில் மதுரை நோக்கி முன்னே சென்ற லாரி மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து ஆனது.
காரில் பயணம் செய்த ராம்குமார் அவரது மனைவி மகாலட்சுமி ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களது இரண்டு பெண் குழந்தைகள் காயமின்றி தப்பினர்.

கார் விபத்தில் உடன் வந்த மகாலட்சுமியின் தாயார் மகேஸ்வரி இடர்பாடுகளில் சிக்கி உடல் நசுங்கி உயிர் இழந்தார் . இடர்பாடுகளில் சிக்கி இருந்த இருந்த அவரது உடலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கொட்டாம்பட்டி போலீசார் மீட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களிடம் இருந்து நகைகள் மற்றும் இரண்டு செல்போன்கள் AS ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மூலமாக கொட்டாம்பட்டி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.