இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நான்காண்டுகளை கடந்து, ஐந்தாவது தொடங்கியதில் திமுக அரசு சவால்களை சந்தித்து சாதனை ஆக்கியது என்று விளம்பரங்களை பக்கம், பக்கமாக இன்றைக்கு வந்து கொண்டே இருக்கிறது ஆனால் தமிழ்நாட்டின் மக்களின் நிலை என்று பார்த்தால் அந்தோபரிதாபமாக இருக்கிறது என்ற நிலை தான் இன்றைக்கு களத்திலே காணப்படுகிறது.
மொத்தத்தில் ஸ்டாலின் திமுக அரசு சாதனைகளை, சவால்களை சந்தித்து சாதிக்கவில்லை என்பதை தான் நாம் இன்றைக்கு பார்த்துக் கொண்டிருக்கிறோம்,
கொஞ்சம் கூட கூச்சப்படாமல், கொஞ்சம் கூட வெட்கப்படாமல் இன்றைக்கு இருக்கிற தமிழ்நாட்டினுடைய பரிதாப நிலையை மூடி மறைக்கின்ற வகையிலே தான் அவர்கள் சாதனை என்று வெற்று விளம்பரங்களை தேடிக் கொள்வதால் மக்களுக்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.
குறிப்பாகஸ்டாலின் கொடுத்திருக்கிற தேர்தல் வாக்குறுதியில் 10 சகவீதம் கூட நிறைவேற்ற முடியாத ஒரு கையாலாகாத அரசாக உள்ளது, ஆனால் 4 ஆண்கள் முடிந்த பிறகு 90 சகவீதம் நிறைவேற்றி விட்டோம் என்ற ஒரு பச்சை பொய்யை இன்றைக்கு கூச்சம் இல்லாமல், கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
நீங்கள் சொல்படியே 90 சதவீதம் இருந்தால் பட்டியலை கொடுங்கள்?
அவர்கள் வெளியிட்ட அந்த தேர்தல் அறிக்கை பட்டியலை ஒப்பிட்டு பார்த்தால், குறைந்தபட்சம் நிதி செலவு இல்லாத மாதம் ஒரு முறை மின் கட்டண கட்டணத்தை கூட நிறைவேற்றவில்லை,

நீட் ரத்து செய்து இருக்கிறார்களா? நீட் தேர்வு ரகசியம் எங்கே போனது, ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்பு ஐந்து ஆண்டுகளுக்கு 50 லட்சம் ,இது குழந்தைக்கு கூட தெரிகிற கணக்கு ஆனால் ஸ்டாலின் இன்றைக்கு கணக்கு தெரியவில்லையே என்று தான் வேதனையாக இருக்கிறது
இந்த சாதாரண கணக்கே தெரியாதவர் எப்படி நிதி நிலை கையாள போகிறார் என்பது தான் வேதனையாக இருக்கிறது.
மூன்றரை லட்சம் காலி பணியிடங்கள், 2 லட்சம் புதிய அரசு பணியிடங்களை பூர்த்தி செய்வோம் என்ற வாக்குறுதி எந்த நிலையில் இருக்கிறது ,பெட்ரோல்,டீசல் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? கேஸ் மானியம் நூறு ரூபாய் என்ன ஆனது?
இதெல்லாம் நீங்கள் கொடுத்த வாக்குறுதி இதை கொடுத்து தானே? மக்களிடத்தில் கொடுத்த வாக்குகளைப் பற்றிகவலைபாடமல் ஆட்சி அதிகாரத்தில் இந்த நான்கு ஆண்டுகளில் நீங்கள் இன்றைக்கு அமெரிக்க அதிபர் டிரம்பை விட கார் அணிவகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறீர்களே? அந்த அணிவகுப்பை பார்க்கிற போது ஏதோ அமெரிக்க அதிபரை போல உங்களை நீங்களே நினைத்துக் கொண்டு உள்ளீர்கள் இந்த பகட்டு ஆடம்பர ஆர்ப்பாட்டஅணி
வகுப்பினால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது?
ஆனால் இன்றைக்கு தமிழ்நாடு
சுடுகாடாக மாறி கொலை சம்பவத்தில் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறது, இந்த உண்மையை மறைக்க முடியுமா? உங்கள் மனசாட்சியை தொட்டு கை வைத்து நீங்கள் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும்.
ஆனால் இன்றைக்கு தமிழ்நாடு சாதித்து காட்சியளிக்கிறது என்று சொன்னால் இது எப்படி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பச்சை பொய்யாக இருக்கிறது இல்லையா?
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தினந்தோறும் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்தில் கேள்வி எழுப்பினால் அது குறித்து இதுவரை நீங்கள் ஒரு பதில் கூட சொல்லவில்லை. சட்டமன்றத்தில் அரசு ஊழியர்கள் கேட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை இன்னும் அறிவிக்கவில்லை ஆனால் அவர்களை மேலும் கடனாளியாக 9 அம்ச திட்டத்தை அறிவிக்கிறீர்கள் இன்னமும் எட்டு மாதம்தான் உங்களுக்கு ஆட்சி உள்ளது ஆனாலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை இன்னும் அறிவிக்கவில்லை.இந்த கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் பொழுது அமைச்சர்கள் வீட்டுக்கு போகும்
சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
இந்த நான்காண்டு காலத்திலே அதிகமாக நீதிமன்றத்தினுடைய,நீதி அரசர்களின் கண்டனத்திற்கு உள்ளான அரசு இந்த ஸ்டாலின் திமுக அரசு தான் இது உண்மையா? இல்லையா?
பாலியல் வன்கொடுமையை நீங்கள் எதிர்கொள்வதிலே, தடுப்பதிலே, கையாளுவதிலே நீதிமன்றத்தினுடைய கண்டனங்களை இந்த அரசு எதிர்கொண்டதா இல்லையா?
நிர்வாக ரீதியாக நீங்கள் அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் நீதிமன்றங்களுடைய கண்டனங்களுக்கு உள்ளீர்களா? இல்லையா? எத்தனை முறை நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு இந்த அரசு ஆளாக இருக்கிறது? காவல்துறை செயல்படுகிறதா என்று கூட நீதிமன்றங்கள் கண்டனங்கள் தெரிவித்து இருக்கின்றன?
இன்றைக்கு இதைவிட கண்டனங்களை சந்தித்த தமிழ்நாட்டிலே இதுவரை நாம் பார்த்ததில்லை
இதிலே 2.0 லோடிங் என்று சட்டமன்றத்தில் ஸ்டாலின் கூறுகிறார் இதை ஒரு நகைச்சுவையாக கூட பார்க்க முடியவில்லை.தமிழகம் சாதித்திருக்கிறது என்று ஸ்டாலின் கூறுவது இந்த ஆண்டினுடைய மிகச் சிறந்த கின்னஸ் சாதனை படைத்திருக்கிற பச்சை பொய் ஆகும் இந்த நூற்றாண்டினுடைய கின்னஸ் சாதனை படைத்த பச்சை பொய் பேசுவதில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்
தமிழகத்தின் நிதி அதள பாதாளத்தில் இருந்து கடன் சுமையில் தமிழகம்
முதன்மை மாநிலமாக இருக்கிறது, தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா தொழில் நிறுவனங்களை அங்கே கொண்டு செல்கிறார்கள் அதை நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
அரசு நிர்வாகம் உறங்கிக் கொண்டிருக்கிறது ஆனால் நீங்கள் நடந்து கொண்டு இருக்கீர்கள், நீங்கள் உறங்கினாலும் அரசு நிர்வாகம் நடக்க வேண்டும் அதுதான் ஒரு சிறந்த நிர்வாகம்.
ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தை உறங்க வைத்துவிட்டு, மக்களை வாட்டி வதைத்து விட்டு நீங்கள் நடந்து கொண்டே இருப்பதுனாலே தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பலன்? இதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வி.
பக்கம்,பக்கமாக விளம்பரம் கொடுக்கிற நீங்கள் ,பக்கமாக நிற்கக்கூடிய மக்களுடைய நலனை ஏன் சிந்திக்க மறந்தீர்கள்? உங்கள் பக்கமாக மக்கள் நிற்கிறார்கள் என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிற நீங்கள் இப்போது உங்களிடத்தில் இருந்து அந்த மக்கள் விலகி இருக்கிறார்களே?
உங்கள் நடவடிக்கையால், பேச்சால் இயலாமையால் உங்கள் நிர்வாக குளறுபடியினாலே, மக்கள் மீது அக்கறை இல்லாத காரணத்தினால் ஒட்டுமொத்த நிர்வாகமும் குளறுபடியாகி ஆகியுள்ளதை இந்த நாடு இதுவரை பார்த்ததே இல்லை.
காவல்துறையை கைகள் கட்டப்பட்டிருக்கிறது. போதை பொருள் கேந்திர நிலையமாக தமிழகம் மாறிவிட்டது, பயங்கரவாதிகளுக்கு, தமிழ்நாட்டில் தொடர்பு உள்ளது என்ற அதிர்ச்சியான செய்தி கூட வெளியே வருகிறது
மக்களுக்கு சேவை ஆற்றும் கடமையை நீங்கள் சாதனை என்று சொன்னால் எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார் ? இன்றைக்கு மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து ஸ்டாலின் தவறி விட்டார்
அம்மாவின் அரசு மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் ,குடிமராமத்து திட்டம் இது போன்ற வரலாற்று திட்டங்களை செய்து இந்திய அளவில் சாதனை படைத்தது.
ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் திமுக அரசு கடன் வாங்குவதற்கு முதலிடம், நிர்வாக குளறுபடிகளில் முதலிடம், பாலியல் வன்முறையில்
முதலிடம்,சட்ட ஒழுங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவற்றில் முதலிடம், இன்றைக்கு நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது?
இன்றைக்கு தமிழகம் சுடுகாடாக மாறிவிட்டது தான் உங்கள் சாதனை. நீங்கள் செய்தது சாதனை அல்ல தமிழ்நாட்டு மக்களுக்கு வேதனை,இந்த வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இனியும் இந்த வேதனை தொடரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியார் வருவார் என கூறினார்.





