• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காய்கறி வாகனத்தில் 105 கிலோ குட்கா..,

ByG. Anbalagan

May 7, 2025

தமிழகத்தில் குட்கா ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு தடை உள்ள நிலையில் நேற்று நேற்று இரவு அருவங்காடு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலை காணிக்கராஜ் நகர் பகுதியில் நேற்று இரவு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அச்சமயம் அவ்வழியே வந்த கேரளா பதிவு எண் கொண்ட டெம்போ வாகனத்தில் காய்கறிகளுக்கு நடுவில் பதுக்கி எடுத்துவரப்பட்ட 105 கிலோ குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் வாகனத்தில் வந்த நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா பகுதியை சேர்ந்த சிவக்குமார் (41)கேரளா மாநிலம் நிலம்பூரை சேர்ந்த சந்திப் (40)ஆகிய இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து மேட்டுபாளையம் குன்னூர் வழியாக கேரளா மாநிலம் நிலம்பூருக்கு டெம்போ காய்கறிகளுக்கு அடியில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்டது தெறிரிய வந்தது. இதனைத்தொடர்ந்து நீலகிரி மாட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என், எஸ், நிஷா,நேரடி ஆய்வு மேற்கொண்டு துரிதமாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தார். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டெம்போ வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.