சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இந்த பந்தயம், சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில் நகரம்பட்டி வலக்குரோட்டில் இருந்து வீழநேரி வரை பெரிய மற்றும் சின்ன வகை மாட்டு வண்டிகளுக்கு 8 மற்றும் 6 கி.மீ. தூரத்தில் நடைபெற்றது.

பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 4 வண்டிகள், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் என மொத்தம் 14 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய வகை பந்தயத்தை ஒன்றிய செயலாளர் கென்னடி தொடங்கி வைத்தார். சின்ன வகையை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டத்தின் நீலநெறி, மதகுபட்டி, நகரம்பட்டி, ஒக்கூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பந்தயத்தை காண சாலையின் இருபுறத்திலும் ஏராளமானோர் திரண்டனர். மேலும், பந்தயத்தின் தொடக்கமும் முடிவிலும் இருசக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.