• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆண்டவர் சன்னிதானத்தில் சிறப்பு பிரார்த்தனை..,

ByR. Vijay

May 5, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் மத்திய அரசின் ஹஜ் அசோசியேசன் தலைவர் அ.அபூபக்கர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் தலைமை அறங்காவலர் ஹாஜி உசேன் சாஹிப் சால்வை அணிவித்து அவரை வரவேற்றார். தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சன்னிதானத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட ஹஜ் அசோசியேசன் தலைவர் அ.அபூபக்கர் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹஜ் அசோசியேசன் தலைவர் அ.அபூபக்கர், இந்த 2025ம் ஆண்டு ஹஜ் புனித யாத்திரை ஹச் பயணிகளுக்கு சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 468 பேர் சிறப்பாக ஹஜ் யாத்திரை மேற்கொண்டு உள்ளனர். இதற்காக டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 14 விமானங்கள் மூலமாக முதற்கட்டமாக மதினா புனித நகரம் சென்றுள்ளனர்.

தனியார் சுற்றுலா ஏஜெண்டுகள் பிரச்சனையில் தீர்வு எட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் முதல் நபராக பாரத பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கொள்கிறேன். தனியார் ஹஜ் ஆப்பரேட்டர் பிரச்சனையில் மத்திய அரசுக்கும் சவுதி அரசுக்கும் சம்பந்தமில்லை எனவும், தனியார் ஹஜ் ஆப்பரேட்டர்கள் குறித்த நேரத்தில் தரவுகளை பதிவிறக்கம் செய்யாததால் ஏற்பட்ட பிரச்சனை.

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக பணம் கட்டிய 40 ஆயிரம் நபர்களும் 2026 ஆம் ஆண்டில் பயணம் செய்வதற்கான உத்தரவை மத்திய அரசு மூன்று நாட்களுக்கு முன் வழங்கி உள்ளது. ஹஜ் யாத்திரை உள்ளிட்ட சிறுபான்மையினர்களின் பிரச்சனைகளுக்கு இஸ்லாமியர் இணை அமைச்சராக இருந்தால் தான் விரைவில் தீர்வு செய்ய முடியும். இதற்காக வெளியில் ஆள் தேட வேண்டிய அவசியம் இல்லை. பாஜக பெரிய கட்சி அதில் இல்லாத இஸ்லாமிய தலைவர்கள் இல்லை. வரும் ஜூன் மாதம் அமைச்சரவை விரிவாக்கத்தில் பாரத பிரதமர் தாய் உள்ளம் கொண்டால் 40 கோடி இஸ்லாமியர்கள் அவருக்கு கடமைப்பட்டு இருப்பார்கள்.

இந்த ஆண்டுஒரு லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு சவுதி அரசு அனுமதி கொடுத்தது. இதில் 50,000 தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் நீதிமன்றம் சென்றதால் நாற்பதாயிரம் விசாக்கள் தடைப்பட்டு உள்ளது.

தமிழக முதலமைச்சர் ஹஜ் பயன்களுக்காக 25 ஆயிரம் ரூபாய் ஒரு நாட்களில் அவரது வங்கி கணக்கில் வர வைக்கப்பட உள்ளது. தமிழக ஹஜ் கமிட்டி நிர்வாக செலவிற்காக 80 லட்சம் தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. ஹஜ் பயணிகளுக்கான மத்திய அரசு மானியம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசு ஹஜ் பயணிகளுக்கான மாநிலத்தை நிறுத்தியது.

தற்போது தனது சொந்த செலவில் தான் ஹஜ் யாத்திரை செல்ல வேண்டும் என இஸ்லாமியர்கள் உணர்ந்து முன்வந்துள்ளதால் மத்திய அரசின் நிதியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. உலக முஸ்லிம் கவுன்சில் முடிவுப்படி இந்தியாவிற்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு 10,000 கூடுதல் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அ.அபூபக்கர் தெரிவித்தார்.