நாகை புத்தூர் ரவுண்டானாவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா, சப் -இன்ஸ்பெக்டர் விவேக் ரவி ராஜ், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் அக்பர் அலி ஆகியோர் அடங்கிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த கரை வழி மறித்து சோதனை செய்தனர். சோதனையில், புதுச்சேரி மாநில சாராய பாட்டில்கள் மூட்டை, மூட்டையாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் காரைக்காலை சேர்ந்த ஆரோக்கிய வினோத் (வயது 38), மார்க் ஆண்டனி ரோலட்(35) ஆகியோர் என்பதும், காரைக்காலில் இருந்து நாகைக்கு சாராய பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து காருடன் ரூ. 2 லட்சம் சாராய பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவந்தனர். இது குறித்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.