காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்க வேண்டும். தேர்தலின் போது திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இந்தப் போராட்டத்தில் 200 மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மாவட்டம் முழுவதிலும் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து கலந்து கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.