புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 310-ஆம் ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பங்குதந்தை ஜோசப் பால் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து பெருவிழா கொடிக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு அருள்புஷ்பம் தலைமையில் கோவில் கொடி மரத்தில் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து நவ நாட்களில் தினந்தோறும் காலை மாலை என இரு வேலைகளும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. ஆண்டு பெருவிழாவின் ஆடம்பர தேர்பவணி வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திரளான ஊர் பொதுமக்கள், இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆண்டு பெருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்கு தந்தை மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)