• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியீடு

Byவிஷா

May 1, 2025

தமிழ்நாட்டில் பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 1 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2025ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளில் மாநிலம் முழுவதும் உள்ள 7518 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் மற்றும் தனித்தேர்வாளர்கள் எழுதினார். சரியாகச் சொல்வதானால், 3,78,545 ஆண் மாணவர்கள், 4,24,023 பெண் மாணவிகள், 18,344 தனித்தேர்வாளர்கள் மற்றும் 145 சிறைவாசிகள் என மொத்தமாக 8,21,057 பேர் தேர்வுகளில் பங்கேற்றனர். இத்தனை பேரும் 3316 தேர்வு மையங்களில் இந்த பொதுத்தேர்வுகளை எழுதியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி 83 மையங்களில் நடைபெற்று வருகிறது. மேலும், மே 5-ம் தேதி பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிளஸ்2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த தேர்வுகளுக்கான விடைத்தளை திருத்தும் பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்த நிலையில் உள்ளன. இந்த மதிப்பீட்டு வேலைகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்வுகள் இயக்குநரகம் முன்னதாகவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான மதிப்பீட்டுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி, மே 9-ஆம் தேதியும், மே 19-ஆம் தேதி பிளஸ் 1, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி 2025ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை இணையதளங்கள் tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகியவற்றில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும், தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தி மூலமாக அறிய விரும்பும் மாணவர்கள் தங்கள் கைபேசி மூலம் 92822 32585 என்ற எண்ணிற்கு TNBOARD12 எனும் குறியீட்டைக் குறுஞ்செய்தியாக அனுப்பலாம்.

மாணவர்கள் இணையதளத்தில் தங்களது தேர்வு முடிவுகளை காண, முதலில் tnresults.nic.in என்ற இணையதளத்தில் சென்று ‘TN HSE(+2) தேர்வு முடிவு 2025’ எனும் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். பிறகு, DD/MM/YYYY வடிவத்தில் தங்களது பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை உள்ளீடு செய்து ‘மதிப்பெண்களைப் பெறு’ என்பதை கிளிக் செய்வதன் மூலம் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.