இன்று அட்சய திருதியை என்பதால் தங்கம் விலை உயருமா? என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலரும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள். ஏனென்றால் இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது மேலும் பெருகும் என்பது நம்பிக்கை. இதனால் தங்கம் விற்பனை இன்று அதிகமாக நடக்கும். இதற்கிடையே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் கட்டணப் போர் உலக சந்தையை உலுக்கியுள்ளது. இந்த நேரத்தில், மக்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை வாங்குவதன் மூலம் தங்கள் போர்ட்ஃபோலியோவைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
இதனால்தான் இந்த ஆண்டு இதுவரை தங்கத்தின் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டணக் கொள்கை, டாலர் பலவீனமடைதல் மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சங்கள் தங்கத்தின் விலையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளன. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தினசரி தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் 30 ஆம் தேதி அட்சய திருதியையான இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,980க்கம், சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லாமல் கிராம் ரூ.111 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் சிறிது நிம்மதியடைந்துள்ளார்.
இன்று அட்சய திருதியை : தங்கம் விலையில் மாற்றமில்லை
