• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவைத் தாக்காமல் இருக்க மதுரையில் சிறப்பு பிரார்த்தனை

Byகுமார்

Dec 4, 2021

கொரோனா வைரஸின் நீட்சியாக வீரியமிக்கதாக 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் (பி 1.1.529) வைரஸ் இந்தியாவைத் தாக்காமல் இருக்க மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சி மகா பெரியவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் குறிப்பாக கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பரவி பெரிய அளவை பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்சமயம் அதனை கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட வழிமுறைகளால் வைரஸ் பரவலை கட்டுப்பாடுத்த அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் வைரஸ் புது வடிவம் பெற்று ஒமிக்ரான் என்ற வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்ந்து இந்த புதுவித வைரஸ் இந்தியா முழுவதும் பரவாமல் இருப்பதற்காகவும், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்காகவும் அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.