புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ ஏமாரியம்மன் திருக்கோவில் சித்திரை மாத பூச்செரிதல், அக்னி காவடி,பால்குடம் திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த அக்னியில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுக்கும் அலகு குத்தியும் காவடி எடுக்கும் அக்னியில் இறங்கினர்.

இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் இதனைக் காண சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.