நாகப்பட்டினம் மாவட்டம் கடல் சார்ந்த மாவட்டம் என்பதால் பெரும்பாலும் நிலத்தடி நீரில் உப்பு நீர் கலந்து உவர்ப்பு நீராக மாறிவிடுகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாமல் உள்ளனர் குறிப்பாக கோடை காலம் தொடங்கிவிட்டால், பெரும பொதுமக்கள் குடிநீருக்கு பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட மூலம் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த குடிநீரும் தேவைக்கு குறைவாகவே பொது மக்களுக்கு கிடைக்கிறது. ராட்சச குழாய் மூலம் கொண்டுவரப்படும்.
குடிநீர் அந்தந்த ஊராட்சிகளில் மேல் நீர் தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட்டு கிராமத்தின் பல்வேறு வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது இந்த மேல் நீர் தேக்க தொட்டி சரிவர பராமரிக்கப்படுகிறது என்றால் கேள்விக்குறியாக தான் உள்ளது. சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன. அதனை உணர்த்தும் விதமாக நாகை அருகே காரப்பிடாகை ஸ்டாலின் நகரில் பொது குடிநீர் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் மிதப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தற்போது பரவி வருகிறது எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட குடிநீர் மேல்நீர் தேக்க தொட்டியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.