• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

லாரி டயர் வெடித்து தீ விபத்து!!

ByT.Vasanthkumar

Apr 28, 2025

பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கழுதியில் இருந்து லாரி வெள்ளை சிமெண்ட் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் செல்வதற்காக கரூர் கிருஷ்ணராயபுரம் குன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரின் மகன் கதிரேசன் ஓட்டிக்கொண்டு வந்தபோது பெரம்பலூர் மாவட்டம் அயன் பேரையூர் சமத்துவபுரம் அருகே லாரியின் டயர் வெடித்து தீப்பற்றி லாரி எரியத் தொடங்கியது.

சுதாரித்த லாரி ஓட்டுநர் பெரம்பலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து பெரம்பலூர் தீயணைப்பு துறை அலுவலர் வீரபாகு தலைமையில் லாரியை நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.