• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஏழாயிரம்பண்ணையில் புதிய தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி

சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் புதிய தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.

சாத்தூர் அருகிலுள்ள ஏழாயிரம்பண்ணையில் பத்ரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இப்பகுதியில் இத்தனை கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பொங்கல் திருவிழா கோலாக்கலமாக நடைபெறும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, திருத்தேர் ஊர்வலமும் சிறப்பாக நடைபெறும். பல ஆண்டுகளாக ஊர்வலமாக இழுத்துச் சென்ற இந்த திருத்தேருக்கு பதில் தற்பொழுது புதிய தேர் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

பத்ரகாளியம்மன் திருக்கோவில் சித்திரை பொங்கல் விழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதிதாக செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்த புதிய திருத்தேருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி அலங்காரம் செய்து ரத வீதியில் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. பத்ரகாளியம்மன் திருக்கோவில் நிர்வாகிகள் அறங்காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்து பக்தியுடன் ரத வீதியில் வலம் வந்து மீண்டும் நிலைக்கு நிறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் 7000 பண்ணை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்கி வழிபட்டுச் சென்றனர்.