• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி நேரலை

ByM.I.MOHAMMED FAROOK

Apr 27, 2025

காரைக்காலில் பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமனோர் பங்கேற்றனர்.

  பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களோடு கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், இன்றைய கலந்துரையாடல் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலம் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

   இதில் புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர்கள் ஜி.என்.எஸ்ராஜசேகரன், வி.எம்.சி.கணபதி, மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட ஏராளமனோர் பாஜகவினர் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை நேரலையில் கண்டு ரசித்தனர்.

     மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி "ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத சம்பவம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் காயப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள்." என்று பேசினார்.