நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை இரயில் நிலையம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் சுமார் 6 அடி நீளமுள்ள இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து ஊர்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை இரயில் பாதை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.இந்த நிலையில் குன்னூர் இரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளம் பகுதியில் இரண்டு வனப்பகுதியில் இருந்து ஊர்ந்து வந்த இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து ஊர்ந்து வந்துள்ளது.சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தண்டவாளத்தில் ஊர்ந்து கொண்டே இருந்துள்ளது.இதனால் இரயில்வே நிர்வாகம் சிறிது நேரம் இரயிலை இயக்காமல் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கியது. குறிப்பாக பாம்புகள் தண்டவாளத்தில் ஊர்ந்து வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.