காஷ்மீர் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடினமான தண்டனை கொடுக்க வேண்டும். காஷ்மீரின் அமைதி எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. இது போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடுவதற்கு கனவில் கூட அவர்கள் நினைக்கக் கூடாது.
கோயம்புத்தூரில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.
கடந்த 15 நாட்களாக கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரஜினியின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் அங்கு ரசிகர்களையும் சந்தித்திருந்தார்.
பிரசித்தி பெற்ற சிவன் கோயிலுல் தரிசனம் மேற்கொண்டு படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் கோயம்புத்தூரில் இருந்து இண்டிகோ விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் :-
நல்லபடியாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பொழுதுதான் தொடங்கியுள்ளோம். இதுதான் இரண்டாவது கால்ஷீட்.
தீவிரவாத செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் இயற்கையான அமைதி திரும்பி இருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று இது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். கண்டிப்பாக இதை செய்தவர்களுக்கும், அதன் பின்னால் இருப்பவர்களுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடினமான தண்டனை கொடுக்க வேண்டும். இது போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடுவதற்கு கனவில் கூட அவர்கள் நினைக்கக் கூடாது என்ற வகையில் செய்ய வேண்டும் என கூறி புறப்பட்டுச் சென்றார்..








