அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேங்காய் திட்டு பகுதியில் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் சாலைகள் மத்திய கோட்டம் மூலம் ரூ.33,20,000/-லட்சம் மதிப்பீட்டில் தேங்காய் திட்டு பகுதியில் உள்ள உட்புற வீதிகளான சீதா வேதநாயகம் நகர். சன் கார்டன். பரசுராமன் நகர் பெருமாள் நாயக்கர் வீதி.வள்ளலார் வீதி. ஆகிய பகுதிகளில் செம்மண் சாலைகளாக மேம்படுத்துவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது இதில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்கிற தஷ்ணாமூர்த்தி கலந்து கொண்டு பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

விழாவில் அரியாங்குப்பம் தொகுதியைச் சார்ந்த N.R. காங்கிரஸ். தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.