கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பத்துக்கும் மேற்பட்ட வரை காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

அதில் அந்த மாணவியின் சித்தப்பா மற்றும் தாய் பள்ளி மாணவியின் ஆண் நண்பர் ஆகிய மூன்று பேரையும் போக்சோ வழக்கு போடப்பட்டு மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் விசாரணைக்காக அழைத்து வந்த இரண்டு வாலிபர்களை விடுவிக்க 5000 பணம் பெற்றதாக விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் தலைமை காவலர் சிவசக்தி இரண்டு பேர் மீது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இடம் புகார் எழுந்தது.
அதன் பேரில் விழுப்புரம் சரக டிஐஜி நிஷா மெட்டல் போக்சா வழக்கில் விசாரணைக்காக அழைத்து வந்த வாலிபர்களை விடுவிக்க பணம் பெற்ற குற்றத்திற்காக அவர்கள் இரண்டு பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.