புதுக்கோட்டையில் அகில இந்திய கட்டுணர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் அகில இந்திய கட்டுணர்கள் சங்க தேசிய பொறுப்பாளர் மற்றும் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கூட்டாக பேசுகையில்,
கிரஷர் குவாரி உரிமையாளர்களின் செயற்கையான விலை உயர்வை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்தவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்டட பணிகளும் நிறுத்தப்படும். அகில இந்திய கட்டுனர் சங்கம் எச்சரிக்கை.
தமிழ்நாடு முழுவதும் கிரஷர் குவாரி உரிமையாளர்கள் கிரஷரின் உற்பத்தியாக கூடிய கட்டுமான பொருட்களுக்கு செயற்கையான முறையில் விலையை ஏற்றி உள்ளனர்.
இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசின் கட்டடப் பணிகள், தனியார் கட்டட பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது,
இதனால் அகில இந்திய கட்டுனர் சங்கம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.
மேலும் முதலமைச்சரையும் துறை அமைச்சர்களையும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது, முதலமைச்சரை சந்தித்து தங்களது கோரிக்கையை எடுத்துரைப்போம். கோரிக்கையை பரிசீலனை செய்து முதலமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுப்பார் என்று முழு நம்பிக்கை உள்ளது.
கிரஷர் குவாரி உரிமையாளர்கள் விலையை குறைக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பணிகளையும் நிறுத்துவதை தவிர கட்டுனர் சங்கத்திற்கு வேறு வழி தெரியவில்லை,
விலை ஏற்றதால் கட்டுனர்கள் கட்டுமான தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் அதனால் இதற்கு உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு குவாரி உரிமையாளர்கள் கிரஷர் உரிமையாளர்கள் அமைச்சர் துரைமுருகனை சந்தித்து பேசியதாகவும் செய்தி குறிப்பை வெளியிட்டு இதனைத் தொடர்ந்து எம் சாண்ட், பிசாண்ட் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பொருட்களுக்கு டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை விலை ஏற்றம் செய்துள்ளனர் இதனால் கட்டுணர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அமைச்சருக்கு தெரியாமலேயே கிரஷர் உரிமையாளர்கள் இந்த விலை ஏற்றத்தை அறிவித்துள்ளதாக தெரிகிறது ஏனென்றால் அரசின் சார்பாக எந்த விதமான அறிக்கையும் வெளியிடப்படவில்லை இவர்களாகவே விலையற்ற பட்டியலை அறிவித்துள்ளனர்.
உடனடியாக தமிழக முதல்வர் இந்த விஷயத்தை தலையிட்டு ஏற்றப்பட்ட விலையை உடனடியாக குறைக்க வேண்டும். இல்லை என்றால் எங்களுக்கு கட்டிடப் பணிகளை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை. இதன் காரணமாக அரசு கட்டிட பணிகளும் பாதிக்கப்படும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் வீடு கட்டும் கனவும் சிதைக்கப்படும் என்ற நிலை ஏற்படும் இதை தவிர்க்க வேண்டும் என்றால் உடனடியாக முதல்வர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுக்கு எந்த விதமான அரசியல் அழுத்தமும் இல்லை
அதேபோன்று கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தமிழகத்திலிருந்து மணல் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு மணல் கொடுப்பதற்கு அவர்கள் தயாராக உள்ளனர். ஆனால் தமிழகத்தின் எல்லையில் தமிழக அரசு அதை தடுத்து நிறுத்துகிறது தமிழகத்தில் மணல் எடுப்பதற்கு அனுமதி இல்லை. எனவே அண்டை மாநிலங்களில் இருந்து மணல்கள் சப்ளை செய்யப்படுவதற்கு தயாராக இருந்தாலும் தமிழக அரசு எல்லை பகுதியிலேயே அதை தடுத்து நிறுத்துகிறது. இந்த தடுத்து நிறுத்தலை உடனடியாக அரசு கைவிட்டு அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மணல் கொண்டு வருவதை அனுமதிக்க வேண்டும்.