பஹல்காம் – ல் சுற்றுலா சென்ற பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாட்டையே உழுக்கியுள்ள சூழலில், பலரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, பதில் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்ல கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மதுரை மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத், பாஜக மற்றும் இந்து தமிழக கட்சி சார்பில் பயங்கரவாதிகளின் தாக்குதலை கண்டித்தும், உயிரிழந்தோர் ஆன்மா சாந்தியடைய கைகளில் தீபம் ஏந்தி, மலர் தூவி மரியாதை செய்து மௌன அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து இந்து தமிழக கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் தலைமையில் விஷ்வ ஹிந்து பரிஷத், பாஜக நிர்வாகிகள் பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்லவும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.




