• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் டேலி பிரைம் 6.0 அறிமுகம்

BySeenu

Apr 24, 2025

மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன் டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் டேலி பிரைம் 6.0 அறிமுகப்படுத்தபட்டது.

கனெக்டட் பேங்கிங் அம்சத்துடன் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் இது புதிய புரட்சியை உண்டாக்கும் என கோவையில் டேலி நிறுவனத்தின் இந்திய வர்த்தக இயக்குனர் சமீர் தீக்சித் தகவல் தெரிவித்தார்.

கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை சார்ந்த நிறுவனமாக தனது சேவையை (Tally Solutions Pvt Ltd) டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனம் துவங்கியது.

உலகளவில் வணிக மேலாண்மை மென்பொருளை வழங்கி வரும் டேலி நிறுவனம், வணிக மேலாண்மை மற்றும் வங்கி தொடர்பான கணக்குகளை ஒரே தளத்தில் இணைத்து நிறுவனங்களின் வரவு செலவு மற்றும் வரி தொடர்பான பணிகளை எளிதாக நிர்வாகம் செய்யும் வகையில், டேலி மென்பொருட்கள் உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவையை விரிவு படுத்தி உள்ளது.

இந்நிலையில் சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு தனது புதிய டேலி பிரைம் 6.0 வசதியை டேலி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில் டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தக இயக்குனர் சமீர் தீக்‌ஷித் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய இந்திய வர்த்தக இயக்குனர் சமீர் தீக்‌ஷித்..,

கனெக்டட் பேங்கிங் அம்சத்துடன் சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிதி மேலாண்மையை எளிதாக்கும் வகையில் இந்த டேலி பிரைம் 6.0 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

டேலி பிரைம் பேங்க் ரீகான்சிலியேஷன், பேங்கிங் ஆட்டோமேஷன், வணிகங்கள் மற்றும் கணக்காளர்களுக்கான நிதி மேலாண்மை ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

குறிப்பாக வணிகங்களுக்குள் பணம் செலுத்துதல், பரிவர்த்தனைகளை உடனடியாக சரிசெய்தல் மற்றும் வங்கி இருப்புநிலைகளை கண்காணிக்கும் திறனுடன், சுறுசுறுப்பாக இருக்கவும், வளங்களை மேம்படுத்தவும், நிறுவனங்களின் நிதி செயல்பாடுகளில் முழு கட்டுப்பாட்டையும் பராமரிக்கவும் இந்த டேலி பிரைம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என கூறினார்.