புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருமயம் தெற்கு ஒன்றியம் அரண்மனை பட்டி முகாமில், கட்சி பெயர் பலகை சேதப்படுத்தியது தொடர்பாகவும், நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற ஜாதியை வன்கொடுமை சம்பந்தமாகவும். குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் வருகின்ற 25.4.2025-ஆம் தேதி திருமயத்தில் நடத்துவதென முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது காவல்துறை வருகின்ற திங்கட்கிழமை வரை கால அவகாசம் கேட்டுள்ளார்கள். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. காவல்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம்.









