மதுரை நத்தம் நான்கு வழிச்சாலையில் அடிக்கடி நான்கு சக்கர வாகனம் கார் டயர்களில் ஏறும் ராடுகளால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் ஓட்டுகின்றனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து மதுரையில் பிரபல டயர் நிறுவனத்திற்கு ஒரே மாதிரியான டயர்களில் ராடுகள் ஏறி நான்கு ஐந்து கார்கள் வந்தது. இது குறித்து விசாரித்த பொழுது அனைத்துமே மதுரை நத்தம் நான்கு வழிச்சாலையில் நடந்தது என தெரிவித்தனர். இரவு நேரங்களில் இது போன்று நடப்பதாகவும் சாலையில் வேண்டுமென்றே யாரோ இது போன்று செய்வதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றன. இது போன்ற ராடுகள் டயர்கள் மீது ஏறும்பொழுது உடனடியாக டயரில் உள்ள காற்றுகள் அனைத்தும் வெளியேறிவிடும். இதனால் வாகனம் நகர முடியாத சூழ்நிலை ஏற்படும். நத்தம் நான்கு வழி சாலையில் போக்குவரத்து குறைந்த அளவை இயங்குவதால் மர்ம நபர்கள் இதுபோன்று செயல்களில் ஈடுபடுவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். காற்று உடனடியாக இறங்கி விடுவதால் ஸ்டெப் பணியை மாற்றும் நேரத்தில் வாகன ஓட்டிகளை தாக்கி பணம் பறிக்கும் நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

எனினும் இவை அனைத்தும் டியூப்லெஸ் டயர்கள் என்பதால், முடிந்த அளவு வாகன ஓட்டிகள் வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் வைத்து நாங்கள் டயர்களை மாற்றுவதாக தெரிவித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இதுபோன்ற செயல்களில் யாரேனும் ஈடுபடுகிறார்களா என கண்காணிக்க வேண்டும் என்பதே அனைத்து வாகன ஓட்டிகளிலும் வேண்டுகோளாக இருக்கிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அவர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளுக்கு எந்தவித அச்சமும் இன்றி பயணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்களா? எதிர்பார்ப்புடன் வாகன ஓட்டிகள்.
