கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்க்கு இறுதி அஞ்சலி வரும் 26 ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது இதில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று தமிழக அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் சென்று அங்கிருந்து ரோம் நகர் செல்வதற்கு புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்,
கத்தோலிக் திருச்சபையின் 226 வது தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் இவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார், இதையடுத்து நேற்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அவரின் இறப்புக்கு இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றினார்,
மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையினர் மற்றும் தமிழர் நல அமைச்சராக இருக்கக்கூடிய எண்ணையும், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகிய இருவரையும் நேரடியாக சென்று போப் பிரான்சிஸ்க்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் இன்று பயணத்தை தொடங்கியுள்ளோம் கடந்த 2013 ஆம் ஆண்டு, பதிவியேற்று திறம்பட செயல்பட்டு தொண்டு செய்து உலகம் முழுவதும் உள்ள அடிமதனத்தை ஒழிக்க வேண்டும், புலம்பெயர்ந்தவர்களுக்காக ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க வாதாடி போராடியவர் போப் பிரான்சிஸ்.
அண்மையில் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தில் இருந்த நபர்களை கை விலங்கு போட்டு நாடு கடத்திய விவகாரத்தை கூட போப் பிரான்சிஸ்கோ கடுமையாக கண்டித்தார், உடல் ரீதியான பிரச்சினைகள் காரணமாக அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர் முழுக்க முழுக்க பெண்களுக்கு உரிமைக்காக பாடுபட்டவர்,
ஒரு காலத்தில் திருச்சபையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது, அதனை கலைத்து பெண்களும் திருச்சபையில் ஆன்மீக பணிகளை ஆற்ற வேண்டும் என ஒரு நிலையை உருவாக்கி வெற்றி கண்டவர் போப் ஆண்டவர்,
உலகம் முழுவதும் அவர் ஆன்மீகப் பணியை மேற்கொண்டாலும் அவர் எந்த மதத்தை பற்றியும் தவறாக பேசியது இல்லை, அனைவரும் ஒற்றுமையாக இருந்து மனிதநேயத்துடன் செயல்பட வேண்டுமென போதித்தவர்,
இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவரது இறப்புக்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார் அதனடிப்படையில் நாங்கள் இருவரும் தற்போது புறப்படுகிறோம் இவ்வாறு கூறினார்,








