தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
தமிழ்நாடு அரசிடம் கள்ளிறக்க அனுமதி கேட்கவில்லை. கள்ளுக்கடையையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 இல் நடைமுறைக்கு வந்தது. அந்த சட்டம் கொடுத்துள்ள உணவு தேடும் உரிமை தான் கள் இறக்குவதும் பருகுவதும். கலப்படத்தை காரணம் காட்டி கள் இறக்கும் உரிமையை தமிழ்நாடு அரசு பறித்துக் கொண்டுள்ளது.

கேரளா புதுச்சேரி ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உலகில் எங்கும் கள்ளுக்கு தடை கிடையாது. அங்கும் தானே கலப்படம் செய்வார்கள் அங்குள்ள அரசுகள் எல்லாம் கலப்படத்தை கட்டுப்படுத்துகின்ற பொழுது தமிழ்நாட்டில் மட்டும் எங்களால் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் தமிழ்நாடு அரசு ஆளுமை இல்லாத அரசா? ஆளுமை இல்லாமல் போனால் என் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் கேட்கவில்லை. தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்யும் பொழுது புரிதல் இல்லாமல் தமிழ்நாடு அரசு கள்ளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்றுதான் பதிவு செய்துள்ளனர். கல் பற்றிய புரிதல் தமிழ்நாட்டில் இல்லை.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எட்டரை கோடி மக்கள் செம்மறி ஆடுகளாக இருந்து வருகின்றனர். அதனால்தான் ஆட்சி செய்பவர்கள் ஓநாய்களாக இருக்கின்றனர். இதுக்கு கள் தடையே சான்று.
பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் தலைமையிலான அரசு அங்கு பூரண மதுவிலக்கை கொண்டு வந்தது. சாராயம் விளையாட்டு ஏற்றுமதி சரக்கு உள்ளிட்டவருக்கு அங்கு தடை உள்ள நிலையில் கள்ளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட்ட பிறகு குற்ற வழக்குகள் சாலை விபத்துகளும் வெகுவாக குறைந்துள்ளது. குடும்பங்களில் அமைதி நிலவுகிறது. பீகாரிலும் கள்ளச்சாராய சாவு ஏற்பட்டது ஆனால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்க பீகார் அரசு மறுத்துவிட்டது. உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுத்தால் கள்ளச்சாராய விற்பனை கள்ளச்சாராயம் குடிப்பவர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கும் என்று கூறி மறுத்துவிட்டனர்.
ஆனால் தமிழ்நாட்டில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் கள்ளச்சாராயம் மரணம் ஏற்பட்டபோது தமிழ்நாடு அரசு ஓடி சென்று தல பத்து லட்சம் ரூபாயை நிவாரணமாக வாரி வழங்கி உள்ளது.
பீகார் அரசு மது விலக்கு நோக்கி இருக்கும் போது தமிழ்நாடு அரசு மதுவை நோக்கி இருக்கிறது. வரக்கூடிய டிசம்பர் மாதம் பீகார் முதலமைச்சர் சிறப்பு அழைப்பாளராக அழைத்து தமிழ்நாட்டில் மதுவிலக்கு மாநாடு தமிழ்நாடு கல் இயக்கம் சார்பில் நடத்தப்படும். ஒழிக்கப்பட வேண்டியது போதைப்பொருள் தடுக்கப்பட வேண்டியது மது தடை செய்யக்கூடாதது கல் என்பதை முக்கிய இலக்காக கொண்டு அந்த மாநாடு நடைபெற உள்ளது. இடது சாரி வலதுசாரி என அனைத்து கட்சிகளுக்கும் அழைப்புகள் எடுக்கப்படும் வருகின்ற தலைவர்களை வைத்து சிறப்பாக மாநாடு நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம். இதற்கான இடம் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இந்திய அளவில் மதுவிலக்கை அமல்படுத்தினால் தமிழ்நாட்டிலும் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று சட்டமன்றத்தில் கூறும் அத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பிகாரை பின் பற்றி தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொள்கை மாற்றி அமைக்கப்படும் என்று கூறுவதில் என்ன தயக்கம். தெருவுக்கு ஏழு கடை அமைத்து மது விற்பனை நடைபெற்று வரக்கூடிய நிலையில் எதற்கு மதுவிலக்குத்துறை அமைச்சர் சாராயம் ஆறாக ஓடுகிறது. அப்புறம் எதற்கு மதுவிலக்கு பிரிவு மாமுல் வாங்குவதற்காகவா முதலில் இந்த பிரிவு ஒழிக்கப்பட வேண்டும். மது விலக்கு என்ற பிரிவு இருக்க வேண்டிய அவசியமோ தேவையோ இல்லை.
தொடர்ந்து மது குடித்து மதுவிலால் பாதிக்கப்படும் குடிநோயாளிகளுக்கு கள் மருந்து பொருளாக இருக்கிறது அப்படிப்பட்ட கல் இருக்கு தடையை நீக்கி விட்டு உடலுக்கு தீங்கும் கேடும் விளைவிக்கக் கூடிய பண்டங்களுக்குத்தான் தடை விதிக்க வேண்டும். ஆனால் இந்த அரசு செய்ய வேண்டியதை செய்யாமல் செய்யக்கூடாததை செய்துள்ளது.
கள் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோதுதான் தடை விதிக்கப்பட்டது அவருக்கு அப்போது நினைவாற்றல் இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை அதனால் ஏற்பட்ட சதிதான் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்குப் பிறகு கலைஞர் கருணாநிதி ஜெயலலிதா போன்றோர்கள் எல்லாம் இதனால் ஆதாயம் பெற்றவர்கள் அவர்களை தற்போது அழைக்க முடியாது அவர்கள் இல்லை. அதனால் தற்போது இருக்க கூடிய தமிழ்நாடு முதலமைச்சர் முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியவர்கள் நேரடியாக தன்னிடம் விவாதித்து கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய பொருள் என்று நிரூபித்து விட்டால் தமிழ்நாடு கள் இயக்கம் அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கள் ஒரு தடை செய்ய வேண்டிய பொருள் என்று நிரூபித்து விட்டால் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு 2026 தேர்தலில் கிடைக்கும்.
அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி விவரத்தில் பங்கேற்று கள் தடை செய்யப்பட வேண்டிய போதை பொருள்தான் என்று நிரூபித்து விட்டால் அவர் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்.
அதேபோல் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் எங்களுடன் விவாதித்து கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள் தான் இந்தியா மதுக்களும் வெளிநாட்டில் இருந்து வரும் அயல்நாட்டு மதுவும் கல்லை விட நல்லவை தான் என்று நிரூபித்து விட்டால் அவர் கட்சிக்கு வெற்றி பெற்று புதிய முதலமைச்சர் ஆக வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
இது போன்ற அரிய வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நாங்கள் எந்த ஒரு தலைவர்களையும் விடப்போவது கிடையாது.
கள் பற்றிய புரிதல் மட்டுமல்ல காவிரி பற்றிய புரிதலும் மக்களுக்கு இல்லை. மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியும் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி சாத்தியமாகவில்லை, இதற்கு தீர்ப்பு கூறப்பட்டுள்ள தவறு காரணமா? தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா தமிழ்நாட்டிற்கு புதுச்சேரிக்கும் கொடுக்க வேண்டிய மாதாந்திர நீரை கொடுக்காமல் இருக்கக்கூடிய தவறு காரணமா? காவிரி மேலாண்மை ஆணையம் ஒழுங்காற்று குழுவின் செயல்பாடு சரியில்லாமல் போனது காரணமா? ஒன்றிய அரசும் உச்சநீத மன்றமும் பாராமுகமாக இருந்து விட்டதா? இதையெல்லாம் பற்றி அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதித்தார்களா? தற்போது நடைபெறும் சட்டமன்றத்தில் யாராவது ஒரு உறுப்பினர் இதுகுறித்து வாய் திறந்தாரா? நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 முதலில் ஒருவர் இதைப்பற்றி குரல் எழுப்பினார்களா? இல்லை, அப்புறம் எதற்காக நாடாளுமன்றம் சட்டமன்றம். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். காவிரி தீர்ப்பு என்பது ஏட்டுச் சுரக்காய் கானல் நீர், மாயமாகும். இதற்கு ஒரே தீர்வு நிரந்தரத்தீர்வு தினம் தோறும் நீர் பங்கீடு. கர்நாடகாவிற்கு தண்ணீர் பகிர்வு 284.75 டிஎம்சி தமிழ்நாடு புதுச்சேரிக்கு 177.25 டிஎம்சி கேரளாவிற்கு 21 டிஎம்சி என்று தினந்தோறும் வரக்கூடிய நீரை இந்த விகிதாச்சார அடிப்படையில் பங்கிட்டு அந்தந்த மாநிலங்களுக்கு கொடுத்துவிட வேண்டும். தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் வழங்கப்பட வேண்டிய உரிமை நீர் ஒரு சொட்டு கூட கர்நாடகாவில் தேக்கக்கூடாது.
எந்த அடிப்படையில் கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் கொடுக்க வேண்டிய நீரை அணையில் தேக்கி மாதாந்திர அடிப்படையில் வழங்குகின்றனர். எந்த அடிப்படையில் 28 ஆண்டுகள் அதற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் என மொத்தம் 35 ஆண்டுகள் வழக்கை நடத்தினீர்கள். கர்நாடகா எப்போது தண்ணீரை திறந்து விட்டுள்ளது. நீரை தேய்க்கினால் எப்போது கர்நாடகாவில் உள்ள அணைகள் உடையும் என்ற நிலை வரும் போது அவர்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் வடிகாலாக நினைத்து தன்னிறை திறந்து விட்டு உள்ளனர். காவிரியில் தமிழ்நாடு புதுச்சேரியும் உரிமை பெற்ற மாநிலங்கள் என்ற எண்ணி தண்ணீரை நேற்று திறக்கவில்லை இன்றும் திறக்கவில்லை நாளையும் திறக்கப் போவதும் இல்லை. நேற்றைய தினம் காவிரி மேலாண்மை வாரியம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனர். வரக்கூடிய மே மாதம் 2.5 டிஎம்சி நீரை கர்நாடகா தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டும் என்று. எத்தனை உத்தரவை நாம் பார்த்துள்ளோம். ஆணையம் ஒழுங்காற்று குழு உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசு என பலரும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். எதை மதித்து கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீரை திறந்து உள்ளது. இது ஏமாற்றுகின்ற ஒரு பித்தலாட்டம். தமிழ்நாடு அரசு இது பற்றி எல்லாம் உணர்ந்து 2033 வரை காத்திடாமல் உடனடியாக மறுசீராய்வு மனுவை காவிரி நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நடுவர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்தால் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும். அங்கும் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காமல் போனால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும்.
காவிரி உபரி நீரை முழுமையாக நாம் பயன்படுத்துவதில்லை சில நேரம் கடலுக்கு செல்கிறது அதனால் அதனை தடுக்க காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியின்போது சிறிது தூரம் இந்த திட்டத்திற்காக கால்வாய் வெட்டினார்கள். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அந்த திட்டம் இடைப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை விரைவு படுத்த வேண்டும் வரக்கூடிய ஓர் ஆண்டுக்குள் இதனை கையில் எடுக்கவில்லை என்றால் வரக்கூடிய 2026 தேர்தலில் மக்கள் பாடம் புகற்றுவார்கள்.
எதை எதையோ சட்டமன்றத்தில் பேசுகிறார்கள் யார் அந்த சார் யார் அந்த சார் என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றனர் அவர்கள் கேட்கும் பிரச்சனை எல்லாம் அனைத்து பகுதிகளிலும் நடைபெறுகிறது தான். அதை தடுக்க காவல் நிலையமும் நீதிமன்றமும் இருக்கிறது அது அவர்களின் வேலை. சட்டமன்றமும் நாடாளுமன்றமும் கொள்கை முடிவு எடுக்க வேண்டிய இடம். அங்கு ஏன் இதைப் பற்றி பேச வேண்டும். நம் தேர்வு செய்து உள்ளவர்கள் எல்லாம் நெல் மணிகள் அல்ல நெல் பதர்கள்.
இந்தியாவில் எங்கெங்கு தென்னை மரங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் ரூங்கோஸ் என்ற வெள்ளை ஈ தாக்குதல் இருக்கின்றது. முதல் முதலில் 2004 இல் இது அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. ஃப்ளோரிடோ மாகாணத்தில் இதன் தாக்கம் உச்சத்தில் சென்றது. 2016 இல் இந்தியாவுக்குள் வந்து முதன் முதலில் பொள்ளாச்சியில் இந்த நோய் கண்டறிந்தோம். அப்போது வேளாண் துறை தென்னை விவசாயிகளை பல்வேறுவற்றை செய்யக் கூடியது அதனையும் கடந்த 8 ஆண்டுகளாக விவசாயிகள் செய்து வந்தனர். ஆனால் அதற்கு தீர்வு ஏற்படவில்லை அதற்கு மாறாக இப்ப பிரச்சனை இந்தியா முழுவதும் பரவி உள்ளது. கேரளாவில் விளைச்சல் மூன்றில் ஒன்றாக குறைந்துவிட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 100 மடங்கு தேங்காய் கொப்பரை விலை உயர்ந்துள்ளது பிரச்சனைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த ஒன்றிய மாநில அரசுகள் தவறினால் அடுத்த ஆண்டு இதே தேதியில் தேங்காய் ஒன்று 200 ரூபாய்க்கு விற்கும். இளநி ரூ.300 க்கு விற்கவும். அப்போது மரத்தில் காய்கள் இருக்காது. அப்படிப்பட்ட சூழலை நோக்கி இந்த நாடு சென்று கொண்டிருக்கிறது அதனால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியல் கட்சியினர் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துவதில்லை அதனை வெளிப்பாடுதான் தற்பொழுது மோசமான நிலைமையை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று தெரிவித்தார்.