காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 25க்கும் மேற்பட்டோர் ஆத்மா சாந்தியடைய மதுரையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சுற்றுலா தலமான காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 25க்கும் மேற்பட்டோரின் ஆத்மா சாந்தி அடையவும், இதுபோல நிகழ்வு நடைபெறாமல் இருக்கவும் மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள மகாபெரியவா கோயிலில் அனுஷத்தின் அனுக்கிரக அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் திருவிளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மருத்துவர் சுவாமிநாதன், செவிலியர்கள், மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து விளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
இது குறித்து அனுஷத்தின் அனுக்கிரக அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு கூறும் போது காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 25 க்கும் மேற்பட்டோரின் ஆத்மா சாந்தி அடைய விளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தோம். மனித உயிர் என்பது விலை மதிக்க முடியாதது. இனி இது போன்ற நிகழ்வு நடைப்பெறாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது என்றார்.