• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

போப் ஆண்டவர் பிரான்சிஸ்காக சிறப்பு இரங்கல் பிரார்த்தனை..,

ByKalamegam Viswanathan

Apr 21, 2025

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (88) காலமானார். 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைவராக போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். உலகில் எங்கும் போர் இல்லாமல் அமைதி நிலவ வேண்டும் என பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தவர் போப்பாண்டவர் பிரான்சிஸ்.

வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு மாதம் உடல்நிலை சீரின்றி சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார். இது உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் அவருக்கு இரங்கல் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள தூய மரியன்னை பேராளயத்தில் (செயின்ட் மேரி சர்ச் ) சபையின் பங்குத்தந்தை ஹென்றி ஜெரோம் தலைமையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவிற்காக சிறப்பு திருப்பலி பிரார்த்தனை மேற்கொண்டார். கிறிஸ்தவர்கள் சிறப்பு திருப்பலி பிரார்த்தனையில் ஈடுபட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்தனர்.
குறிப்பாக பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள், தங்கு விடுதி மாணவர்கள் மற்றும் பங்கு மக்கள் போப் ஆண்டவர் பிரான்சிஸ் திருவுருவ படத்திற்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்தனர்.