எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டி கூட்டணி வைக்கலாம், ஆனால் அவரது உள்ளம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்காது என கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார்.
ஓசூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் வேல்முருகன்..,
எடப்பாடி பழனிச்சாமியை சிபிஐயையும், அமலாக்கத் துறையையும், வருமானவரி துறையையும் அனுப்பி மிரட்டி உருட்டி கூட்டணி வைத்து கொள்ளலாம், ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் உள்ளார்ந்த உள்ளம் ஒரு காலத்திலும் தமிழ்நாட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக மாற்று தரப்போடு சிந்திக்காது எழுதி வைத்து கொள்ளுங்கள் என்றார்.
சிறுபான்மையினர் எல்லாம் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று சட்டம் கொண்டு வந்தால் ராமதாஸ் ஒத்து கொள்வாரா, திருமாவளவன் தொடங்கி, மருத்துவர் ராமதாஸ், முதலமைச்சர் ஸ்டாலின், வைகோ என ஒவ்வொரு தலைவரும் அதுவும் இந்துக்களின் பெயர்களை வைத்துள்ள தலைவரை எடுத்து கொள்ளுங்கள், ஆறறிவு படைத்த எந்த ஒரு தமிழ்நாட்டு தலைவனாவது, இஸ்லாமிய உறவுகளை மாமன் மச்சானாக, அண்ணன் தம்பியாக, தாயாக தந்தையாக கருதி வாழ்கிறார்கள் என்றார்.
தென்னிந்தியா என்பது மதசார்பின்மையாக, பகுத்தறிவோடு சிந்திக்கிற, சகோதரத்துவம் போற்றுகிற, அன்பை பரிமாறுகிற நிலமாகும், அதிலும் தமிழர் நிலம் அதைவிட ஆயிரம் மடங்கு மேலானதாகும் என்றார்.




