சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, தமிழுக்காக உயிர் கொடுத்தவர்கள் தமிழர்கள். இப்போது டெல்லியில் ஆட்சியும், அதிகாரமும் இருக்கின்ற திமிரில் ஒன்றிய அரசு, தமிழர்களை 6 வது விரலாக அலட்சியபடுத்துகின்றனர்.

திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக நிர்பந்தம் கொடுத்து அதிமுகவை, பஜக வளைத்து பிடித்துள்ளனர். சொந்த காலில் நிற்க முடியாத எடப்பாடி, நேற்று சசிகலா காலில் விழுந்து கிடந்தார். இன்று அமிர்ஷா காலில் விழுந்துகிடக்கின்றார். மோடியை, முதல்வர் ஸ்டாலின் வீழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு இந்திய அரசியலில் வந்துள்ளது.
மோடியின் வீழ்ச்சி முதல்வர் ஸ்டாலின் கையில் உள்ளது என்ற சரித்திரத்தை எழுத ஆயுத்தமாகுங்கள் என நாஞ்சில் சம்பத் பேசினார். முன்னதாக நடைபெற்ற மாட்டுவண்டி எல்லை பந்தயத்தில் முதல் 4 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், ரொக்க பரிசையும் அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் வழங்கினார்.