திருவனந்தபுரம் பாறசாலை தாலுகா மருத்துவமனையைச் சேர்ந்த மயக்கவியல் தொழில்நுட்ப வல்லுநர் அருண் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த வாரம் இங்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையை அருண்
கைபேசியில் படம்பிடித்தார். இது மருத்துவர்களின் கவனத்திற்கு வந்தது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவரிடம் விசாரித்தபோது, வீட்டிற்கு வீடியோ கால் செய்ததாக அருண் விளக்கமளித்தார். இதற்கு முன்பும் அருணுக்கு எதிராக இதேபோன்ற புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அருண் மருத்துவமனையில் தற்காலிக ஊழியர் ஆவார்.