விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சரித்திர புகழ்பெற்ற நல்ல தங்காள் கோயில் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக இரு மாதங்களுக்குப் பின் 5 பூசாரிகளை பிடித்து விசாரணை செய்து சிறையில் அடைத்தனர் .

அர்ச்சுனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் கோவில். 15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த நல்ல தங்காள், அவரது அண்ணன் நல்லதம்பி ஆகியோர் தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும், அண்ணன் தங்கை உறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினர். நல்ல தங்காள் தற்கொலை செய்து கொண்ட கிணறு, அவர் தங்கிய இடம் ஆகியவை நினைவுச் சின்னமாகவும் கோயிலாகவும் எழுப்பப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. அக்கோவிலில் நல்லதங்காள் பத்திரகாளியம்மன் வடிவில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.
தமிழகம் முழுவதிலும் இருந்தும் குழந்தை வரம் வேண்டி ஏராளமானோர் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். பல்வேறு சரித்திர புகழ் பெற்ற இக்கோயிலில் கடந்த இரு மாதங்களுக்கு முன் ஜனவரி 25 மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியல் பணத்தை திருடியதுடன் நல்லதங்காள் சிலையையும் உடைத்து நொறுக்கி கீழே தள்ளிவிட்டு சென்றனர்.
மேலும் கோயில் உண்டியலை உடைத்து பணமும் திருடப்பட்டிருந்தது. இதனால் ஆக்ரோஷம் அடைந்த அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் கோயில் முன் திரண்டு போராட்டம் நடத்தினர். ஓரிரு நாளில் குற்றவாளியை கைது செய்து விடுவதாக போலீசார் உறுதி அளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். அதன் பிறகு ஒரு மாதத்திற்கு மேலாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் கிராம மக்கள் மேலும் ஆவேசம் அடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இன் நிலையில் சிலை உடைப்பு சம்பந்தமாக அதே கோயில் பூசாரிகளான சுந்தர மகாலிங்கம், கனகராஜ், பரமேஸ்வரன், கருப்பசாமி, சுந்தரபாண்டி ஆகியோரை வத்திராயிருப்பு காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். எதற்காக சிலை உடைக்கப்பட்டது என்ற விவரங்களை பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[5:02 PM, 4/19/2025] +91 99940 79564: கோயிலில் இருந்து கைரேகை பதிவு உள்ளிட்ட தடயங்களை தடய அறிவியல் துறையினர் சேகரித்தனர். இவ்வழக்கில் விருதுநகர் எஸ்.பி கண்ணன் உத்தரவின் பேரில் ஶ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி ராஜா தலைமையில் 3 தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரச்சினை ஏற்படுத்தும் நோக்கில் ஊர் மக்கள் சிலர் தூண்டுதலின் பேரில் பூசாரிகள் கோயில் சிலையை சேதப்படுத்தி, சிலைக்கு அடியில் இருந்த ஐம்பொன் தகடு உள்ளிட்ட பொருட்களை எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து கோயில் பூசாரிகளான அர்ச்சுனாபுரத்தைச் சேர்ந்த சுந்தர மகாலிங்கம் (68), கனகராஜ் (32), பரமேஸ்வரன் (50), கருப்பசாமி (21), சுந்தரபாண்டி (23) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.