• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,

ByKalamegam Viswanathan

Apr 19, 2025

25 ஊராட்சிகளில் 77 தூய்மைப் பணிகள் பயன்பாட்டிற்காக ரூ.1.95 கோடி மதிப்பீட்டிலான மின்கலன் வாகனங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தொடரந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையுடன் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மாதந்திர உதவித்தொகை, உதவி உபகரணங்கள் வழங்குதல், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குதல் என, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க கடன் உதவி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றுக்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டுமென்ற நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளார்கள்.

அதேபோல, தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பிற்காகவும் இந்த அரசு தொடர்ந்து பல்வேறு நடைவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் இன்றைய தினம் நடைபெற்ற இவ்விழாவில் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, சோழவந்தான் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உட்பட்டு தேர்வு செய்யப்பட்ட 160 மாற்றுத்திறன் கொண்ட பயனாளிகளுக்கு ரூ.1,62,88,000/- மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மாவட்டத்தில் 25 ஊராட்சிகளில் 77 தூய்மை பணிகள் மேற்கொள்ளும் தூய்மை காப்பாளர்கள் வசதிக்காக மின்கலனில் செயல்படும் வாகனங்கள் (eCart) பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. மக்கள் நலனுக்கான திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்படுத்தும் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சௌ.சங்கீதா,
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , கூடுதல் ஆட்சியர் டாக்டர். மோனிகா ராணா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் , தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், துணை மேயர் தி. நாகராஜன் மற்றும்
அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.