• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா..,

ByKalamegam Viswanathan

Apr 19, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நாளை20.4.25 ஞாயிற்றுக்கிழமை காலை கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது தொடர்ந்து ஏப்ரல் 28 தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவிழாவின் நிகழ்ச்சிகள் சித்திரை 15 முதல் சித்திரை 26 வரை வரை 12 நாட்கள் மகாபாரத்தில் வரக்கூடிய கதாபாத்திரத்திற்கு ஏற்ப தினசரி ஒவ்வொரு வேடம் புரிந்து திருவிழா நடைபெறும். அதன்படி திருவிழாவின் நிகழ்ச்சிகளாக 28.4.25 திங்கள் மாலை திருவிழா கொடியேற்றம், 29.4.25. செவ்வாய்க்கிழமை காலை கோவிலைச் சேர்ந்த வீடுகளுக்கு குந்தம் செல்லுதல், மாலை சக்தி கிரகம், 30.4.25 புதன்கிழமை காலை திருக்கல்யாணம், மதியம் அன்னதானம், மாலை உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை, இரவு அம்மனும் சுவாமியும் வீதி உலா நடைபெறும்.

1.5.25. வியாழக்கிழமை மாலை அம்மன் குதிரை வாகனத்தில் புறப்பாடு, சைந்தவன் வேடம் புரிந்து வலம் வருதல், கோவில் முன்பாக சைந்தவன் வதம் நடைபெறும்,
2.5.25. வெள்ளிக்கிழமை காலை கருப்பட்டி கிராமத்தில் பீமன் வேட புரிந்து கீசகனை வதம் செய்யும் நிகழ்ச்சி, 3.5.25 சனிக்கிழமை சோழவந்தானில் காலையிலும், மாலையிலும் பீமன் வேடம் புரிந்து கீசகனை விரட்டும் நிகழ்ச்சி, 4.5.25 ஞாயிற்றுக்கிழமை மாலை அம்மன் புறப்பாடு அர்ஜுனன் வேடம் புரிந்து வருதல் அர்ஜுனன் தபசு இடத்தில் அர்ச்சுனன் தவமிருத்தல் பாஸ்பதாஸ்திரம் பெறுதல்

நிகழ்ச்சி, 5.5.25 திங்கட்கிழமை மாலை அரவான் உருவம் திறப்பு, இரவு சிங்க வாகனத்தில் அம்மன் புறப்பாடு, காளி வேடம் புரிந்து நான்கு ரத வீதியும் வருதல், அரவான் படுகளம் முதல் பலி, கருப்பண்ணசாமி வேடம் நடு இரவு காவல் கொடுத்தல், 6.5.25 செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் எடுத்து வருதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பா அலங்காரம், மாலை துரியோதனன் உருவம் திறப்பு, இரவு 7 மணியளவில் அம்மன் புறப்பாடு, திரௌபதி வேடம் புரிந்து நான்கு ரத வீதியும் வந்து துரியோதனன் படுகளம், அம்மன் கூந்தல் முடிப்பு, 7.5.25 புதன்கிழமை அதிகாலை கங்கை கிரகம் எடுத்தல், காலை 6 மணி அளவில் பூ வளர்த்தல், அன்றுகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் குளூமை சாற்றுதல், மாலை 5 மணி அளவில் பூக்குழி இறங்குதல், இரவு 7 மணி அளவில் சங்கங்கோட்டை கிராமம் வழியாக அம்மன் பவனி வருதல், 8.5.25 வியாழக்கிழமை காலை மஞ்சள் நீராடுதல், கோவில் அக்கினிக்கிரகம் செல்லுதல், மாலை திருவிழா கொடி இறக்கம், அம்மன் வைகை ஆற்றுக்கு சென்று தீர்த்தமாடுதல், இரவு கோவில் வளாகத்தில் அம்மன் ஊஞ்சலாடுதல், அதிகாலை அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா, 9.5.25 வெள்ளிக்கிழமை மாலை பட்டாபிஷேகம், மறுநாள் இரவு வீர விருந்து நடைபெறும். தினசரி மகாபாரத தொடர் சொற்பொழிவு கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், செயல் அலுவலர், கோவிலை சேர்ந்தவர்கள் மற்றும் உபயதார்கள் செய்து வருகின்றனர்.