• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

குடும்பத்துடன் விஷமருந்தி இருவர் உயிரிழப்பு

ByKalamegam Viswanathan

Apr 18, 2025

மதுரையில் வறுமையின் காரணமாக குடும்பத்துடன் விஷமருந்தி இருவர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார்.

மதுரை தாய்நகர் விவேகானந்தர் பகுதியை சேர்ந்தவர் ஜீவகுமாரி. இவரது கணவர் உயிரிழந்த நிலையில் தனது மகள் தனலெட்சுமி (13) மற்றும் மகன் தனசிங்கபெருமாள்(10) ஆகியோருடன் சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வறுமை மற்றும் விரக்தி காரணமாக நேற்று இரவு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார்.

இதில் ஜீவக்குமாரி மற்றும் தனலெட்சுமி (13) ஆகியோர் உயிரிழந்த நிலையில் தனசிங்கபெருமாள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதுகுறித்து கீரைத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரையில் குடும்ப வறுமை காரணமாகவும், குடும்பத்துடன் தற்கொலை செய்த நிலையில், தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.