தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாழ்க்கை ஊதியம் வழங்கிய கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வாழ்வூதியம் கோரும் பேரணி நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே காந்தி மியூசியம் முதல் கலெக்டர் ஆபீஸ் வரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக அரசு ஊழியர்கள் பேரணியாக சென்றனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு தலைமையில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் கோரிக்கை விளக்கவுரையும் பேரணியை துவக்கி வைத்த தமிழ்நாடு அரசு சுகாதார போக்குவரத்து துறை ஊழியர் சங்க முன்னாள் தலைவர் நடராஜன்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கல்யாணசுந்தரம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கண்டன உரையாற்றினர்.