தேர்தல் கால கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
திமுக தனது தேர்தல் கால வாக்குறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும், வரையறுக்கப்பட்ட ஓய்வு ஊதியம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தது. நான்கு ஆண்டுகள் கடந்த பின்பும், தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசின் நிறைவேற்றவில்லை. மேலும் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கையின் போது சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.ராமதேவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன் மற்றும் பல்வேறு சங்கங்களின் பொறுப்பாளர்கள் சத்துணவு அமைப்பாளர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.