தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகிய கே.அண்ணாமலை இளைஞர் அணி தேசிய தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலையின் செல்வாக்கை கருத்தில் கொண்டு, மத்திய தலைமை இந்த வாய்ப்பை ஆராய்ந்து வருகிறது. குறுகிய காலத்தில் இளம் வாக்காளர்கள் மத்தியில் அண்ணாமலை ஏற்படுத்திய தாக்கத்தையும் மத்திய தலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அதே நேரத்தில், தேசிய அளவில் துணைத் தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளோ அல்லது தென் இந்தியாவில் முக்கிய பொறுப்போ அண்ணாமலைக்கு வழங்கப்படலாம் என்ற யூகங்களும் நிலவுகின்றன. புதிய தேசிய தலைமை தேர்ந்தெடுக்கப்படும் போது மட்டுமே இது குறித்து தெளிவு கிடைக்கும். புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் இணைந்து கட்சியை வலுப்படுத்தும் பணிகளை தொடர்வதாகவும், 2026ல் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே இலக்கு என்றும் நயினார் பொறுப்பேற்ற பிறகு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைக்கு தேசிய இளைஞர் அணி தலைவர் பதவி… பாஜக பரிசீலனை..,
