• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மேளதாளத்துடன் கிரிவலம் வந்து நேர்த்திக் கடன்..,

ByVasanth Siddharthan

Apr 13, 2025

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இருந்து வந்த முருக பக்தர்கள் உடல் முழுவதும் கத்தியை குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி பறவை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் 10 அடி நீளம் கொண்ட அலகை முகத்தில் கட்டிக்கொண்டும், உடல் முழுவதும் கத்தியை குத்திக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் கிரிவலம் வந்து காண்பவரை மெய்சிலிர்க்க வைத்தது.

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பக்தர்கள் பலரும் காவிரி எடுத்து கிரிவலம் வந்து முருகனை வழிபட்டு செல்கின்றனர். மலைக் கோயிலில் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.