• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

1500 நபர்களிடம் 24 கோடி ரூபாய் மோசடி!!!

ByKalamegam Viswanathan

Apr 8, 2025

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் ஹரிணி ஆறுமுகம் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ரமேஷ் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் QUEEN டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் தருவதாக கூறி தங்க விடுதி ஒன்றில் கூட்டம் நடத்தியுள்ளனர்.

இதில் தமிழகம், கேரளா,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்களிடம் தலா குறைந்தபட்சம் 5 லட்சம் முதலாக 20 லட்சம் வரை முதலீடு பெற்றுள்ளனர்.

மேலும் மதுரை , கோயம்புத்தூர் சேலம் , திருச்சி , கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இவர்களுடைய பங்குச்சந்தையில் முதலீடு செய்த நிலையில் 3 மாதங்களான முதலீட்டிற்கான லாப தொகையினை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் லாபம் இல்லாத நிலையில் பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக இருவரும் கூறிய நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் இருவரையும் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போனில் தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டதாகவும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட முதலீட்டார்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளோம். ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் ஒவ்வொருவரும் 20 லட்சம் ரூபாய் வரையும் ஏமாற்றமடைந்து நிற்கிறோம்.

எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களுடைய பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மீண்டும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலீட்டாளர்கள் : ரமேஷ் புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்ததால் அவரை நம்பி பணம் செலுத்தினோம். ஆனால் அவரும் அவரது மனைவியும் சேர்ந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள். எனவே எங்களுடைய பணத்தை கிடப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இல்லையெனில் முதலீட்டாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.