• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசின் தீர்மானங்களை நிறைவேற்றி தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

ByT.Vasanthkumar

Apr 8, 2025

தமிழக அரசின் தீர்மானங்களை ஒப்புதல் அளிக்காத தமிழக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் தீர்மானங்களை நிறைவேற்றி தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை வரவேற்கும் விதமாக பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், வேப்பூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்‌ தி.மதியழகன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர் வ.சுப்ரமணியன், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் எம்.ரெங்கராஜ், நகர துணை செயலாளர் சபியுல்லா மற்றும் வழக்கறிஞர் கண்ணன், பி.அறிவுச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் வழக்கறிஞர் அணி சார்பில், பெரம்பலூர் நீதிமன்றம் வளாகத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கவியரசு தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. வழக்கறிஞர்கள் கே.ஜி.மாரிக்கண்ணன், சுபாஷ், பி.இளமைச்செல்வன், மதுபாலன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் நெ.அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.