வக்ஃபு திருத்த சட்டத்தை திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சியினரின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வருகிறது.
நாகை அவுரித்திடலில் மாவட்ட செயலாளர் அருட்செல்வன் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, திக மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், ஜாமத்துகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.