சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 25-வது பட்டமளிப்பு விழா அக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லியோமுத்து உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் அரிமா டாக்டர் சாய் பிரகாஷ் லியோமுத்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திராயன் -3 திட்ட இயக்குனருமான டாக்டர் ப.வீரமுத்துவேல், சிறப்பு விருந்தினராக கிஸ்ஃப்ளோ நிறுவனரும்,தலைமை செயல் அலுவலருமான சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரமுத்துவேல் கூறுகையில் : இப்போதுள்ள மாணவர்கள் அனைவரும் வேலை தேடுபவர்களாக இல்லாமல் மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.
இப்போது விண்வெளியில் ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளது.
விண்வெளியில் மெக்கானிக்கல்,கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கட்ரானிக்ஸ், சாப்ட்வேர் போன்ற அனைத்து இன்ஜினியர்களும் தேவைப்படுகிறார்கள். அவர்கள் மட்டுமின்றி மருத்துவர்களும் இதற்கு தேவைப்படுகிறார்கள்.
மாணவர்கள் படிக்கும்போது நன்றாக படிக்க வேண்டும், நன்றாக மதிப்பெண்கள் பெற வேண்டும்,படிப்பதை புரிந்து படிக்க வேண்டும்.அதன் பின்னர் அவர்களுக்கு எதில் விருப்பம் உள்ளதோ அதை தேர்வு செய்து அதில் நல்ல நிலைக்கு வர வேண்டும்.
விண்வெளியும் ஒரு நல்ல துறை, இந்தத் துறையில் ஏராளமான வாய்ப்புகளும் உள்ளது.
மாணவர்கள் நன்றாக இன்ஜினியரிங் செய்தால் அவர்களுக்கு விண்வெளியில் அதிக வாய்ப்புகள் உள்ளது என இவ்வாறு தெரிவித்தார்.