இராஜபாளையம் கிருஷ்ணாபுரம் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி பால்குடம் விழா நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா பத்தாம் ஆண்டு பால்குடம் எடுக்கும் விழா நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட கும்பங்களை முக்கிய நிர்வாகிகள் முக்கிய தலங்களான ராமேஸ்வரம், திருச்செந்தூர், பாபநாசம் உள்ளிட்ட புகழ்பெற்ற ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தங்கள் முன்பு எடுத்து வர, அதைத்தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலில் சென்றடைந்து, அதன் பின் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கிருஷ்ணாபுரம் இந்து நாடார் உறைவின் முறை தலைவர் இரத்தினவேல் பாண்டியன், செயலாளர் செல்லக்கனி, பொருளாளர் முருகேசன், கணக்கர் குட்டி (எ) இருளப்பசாமி மற்றும் சமூதய நிர்வாகிகள் செய்திருந்தனர்.